fbpx

சூப்பர் வாய்ப்பு…! அரசு வேலை… 40 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம்

சேலம் மாவட்டத்தில் உள்ள 2 பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் பெண்களுக்கு தேவைப்படும் அவசரகால மீட்பு, மருத்துவ உதவி, மனநல ஆலோசனை, காவல் உதவி, சட்ட உதவி, தற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை வழங்கி அவர்களை பாதுகாக்க மத்திய அரசினால் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகஸ்டு 2018 முதல் சேலம் வட்டாரத்திலும், பிப்ரவரி 2024 முதல் ஆத்தூர் வட்டாரத்திலும் மொத்தமாக சேலம் மாவட்டத்தில் 2 மையங்கள் செயல்பட்டு வருகிறது.

தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள 2 சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப ஏதுவாக ஒப்பந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மாவட்டம். ஆத்தூரில் உள்ள மையத்திற்கு ஒரு முதன்மை ஆலோசகர் காலிப்பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக ரூ.22,000/ நிர்ணயிக்கப்பட்டு, இதற்கான கல்வித் தகுதியாக முதுகலை சமூகப்பணி மற்றும் உளவியல் தேர்ச்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு 25 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன் அனுபவமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.

அதேபோன்று, சேலம் மாவட்டத்திற்கு ஒரு வழக்குப் பணியாளர் காலிப்பணியிடத்திற்கும், ஆத்தூரில் உள்ள 3 வழக்குப் பணியாளர் காலிப்பணியிடத்திற்கும் தொகுப்பூதியமாக ரூ.18,000/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி இளங்கலை / முதுகலை சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு 23 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். முன் அனுபவமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் அரசு / தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 வருடபணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படும்.

மேலும், ஆத்தூரில் உள்ள மையத்திற்கு 2 பல்நோக்கு உதவியாளர் காலிப்பணியிடத்திற்கு தொகுப்பூதியமாக ரூ.10,000/ நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பு 21 வயதிற்கு மேல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். நிர்வாக அமைப்பின் கீழ் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். நன்கு சமையல் தெரிந்த பெண் சமையளராக இருக்க வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்படும்.உள்ளூரைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

இதில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விவரங்களை 10.02.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலர், அறை எண் 126, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், சேலம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்கத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

English Summary

Government jobs… People below 40 years of age can apply

Vignesh

Next Post

விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை..!! 30ஆம் தேதி இந்த 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

Mon Jan 27 , 2025
The Chennai Meteorological Department has announced that heavy rains will lash 4 districts in Tamil Nadu on the 30th.

You May Like