fbpx

PMIS பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை…! முழு விவரம் இதோ

இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் நோக்கில் “நான் முதல்வன் Finishing School (NMFS)” மற்றும் “PMIS பயிற்சி (Internship)” திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நான் முதல்வன் Finishing School திட்டம் 18-35 வயது வரை உள்ள வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து, தொழில்வாய்ப்பிற்கு தகுதியானவர்களாக உருவாக்கும் திட்டமாகும். குறுகிய கால பயிற்சி வழங்கி, தொழில்சந்தையில் அவர்களை தகுதிப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம், நிறுவனங்களுக்கு தங்களது தொழில்முறை திறன்களுக்கேற்ப பணியாளர்களாக உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தரம் வாய்ந்த பயிற்சி, வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும். நான் முதல்வன் இணையத்தில் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/விண்ணப்பதாரர்கள் தேவையான இத்திட்டத்தில் பயிற்சிபெற விண்ணப்பிக்கலாம். ஆவணங்களை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் PMIS திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் திட்டமாக முதன்மை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தானியங்கி, வங்கி & நிதிச் சேவைகள், தகவல் & மென்பொருள் மேம்பாடு, தளவாடங்கள், உற்பத்தி & தொழில்துறை முதலிய துறைகளில் அரசு 12 மாத கட்டணமில்லா பயிற்சியினை வழங்குகிறது. 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ. பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு முடித்த 21முதல் 24 வயது வரை உள்ள மாணவ/மாணவியர்கள் இதில் பங்கேற்கலாம்.

பச்சையப்பன் மகளிர் கல்லூரி, காஞ்சிபுரம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஒரகடம், மீனாட்சியம்மன் தொழில்நுட்ப கல்லூரி, உத்திரமேரூர், தொழிற்பயிற்சி நிலையம் வாலாஜாபாத், திருமலை தொழில்நுட்ப கல்லூரி, கீழம்பி மற்றும் பல்லவன் தொழில்நுட்ப கல்லூரி, ஐயங்கார்குளம் ஆகிய இடங்களில் 05.03.2025 முதல் 12.03.2025 வரை அனைத்து வேலை நாட்களிலும் (சனி மற்றும் ஞாயிறு நீங்கலாக) காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும் சேர்க்கை முகாம்களில் கலந்துக்கொண்டு விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5000/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Government provides Rs. 5000 monthly incentive to youth joining PMIS training

Vignesh

Next Post

WPL 2025!. சொந்த மண்ணில் 4வது தோல்வி!. RCB-ஐ வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது டெல்லி!.

Sun Mar 2 , 2025
WPL 2025!. 4th defeat at home!. Delhi enter the play-off round by defeating RCB!.

You May Like