fbpx

Govt Job | ’இனி அரசு மருத்துவர்களின் பிள்ளைகளுக்கும் அரசு வேலை’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு..!!

அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் என்றும் கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் அரசுப் பணி வழங்கப்படுவது போல, மருத்துவத் துறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மருத்துவர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி நியமனம் செய்யப்படும் என்றும் வாரிசுகள் விண்ணப்பித்தால் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என்ற 3 பணிகளில் ஒரு பணியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Read More : PM Kisan | நாளை (பிப்.28) வங்கிக் கணக்கிற்கு வருகிறது ரூ.2,000..!! இவர்களுக்கெல்லாம் இனி கிடையாது..!!

Chella

Next Post

Election: உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 15 இடங்களுக்கு இன்று தேர்தல் தொடங்கியது...!

Tue Feb 27 , 2024
கர்நாடகா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 56 எம்.பி. பதவிகள் காலியாக உள்ளன. சோனியா காந்தி, ஜே.பி.நட்டா, எல்.முருகன் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 15 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 10 எம்.பி. இடங்கள் காலியாக உள்ள நிலையில் 11 பேர் போட்டியிடுகின்றனர். கர்நாடகாவில் 4 எம்.பி. இடங்கள் காலியான நிலையில் 5 […]

You May Like