fbpx

’ஸ்டிரைக் பிரச்சனைக்கு என்கிட்ட ஒரு தீர்வு இருக்கு’..!! புது யோசனை சொன்ன ஹெச்.ராஜா..!!

ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ’’போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு போராட்டம் மேலும் தொடராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில், ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியுமா? என்ற சந்தேகமே எழுந்துள்ளது.

8 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாடு அரசுக்கு கடன் இருக்கிறது. இதை சமாளிக்க நான் ஒரு ஐடியா சொல்கிறேன். அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் அமைச்சர்களின் சொத்துக்களை ஏலம் விட்டால் மொத்த கடனையும் அடைத்து விடலாம். மேலும், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட எவ்விதமான பிரச்சனையும் இருக்காது’’ என்றார்.

Chella

Next Post

விசாரணைக்கு அழைத்து சென்று, காரில் வைத்து பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர்..! வெளியான வாட்ஸ்அப் ஆதாரங்கள்..!

Tue Jan 9 , 2024
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 4 ஆண்டுகளாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது தொடர்பாக வாட்ஸ்அப் பதிவுகளையும் அந்தப் பெண் வெளியிட்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்ததாகவும், விசாரணை என்ற பெயரில் அவரை அழைத்துச் சென்று காருக்குள்ளையே அந்த பெண்ணை […]

You May Like