மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தன்னுடைய காதல் விவகாரத்தால் மனம் உடைந்து போன போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னுடைய காதலி மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்திருக்கிறார். அதன் பிறகு அந்த நபர் ஓடும் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுபாஷ் காரடி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்று துப்பாக்கியுடன் ஜாகீர் கான் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அந்த பெண் அவருடைய தந்தை மற்றும் அவரது சகோதரரை சுட்டு கொலை செய்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்த கான்ஸ்டபிளின் காதலி என்று சொல்லப்படுகிறது. அந்த பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 25 வயதான அந்த பெண் மற்றும் அவருடைய சகோதரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அந்த பெண் முதலில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக இந்தூருக்கு மாற்றப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.கொடூரமான இந்த கொலையை செய்த பின்னர் சுபாஷ் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டு இருக்கிறார். அவருடைய பதிவில் அவள் எனக்கு துரோகம் செய்தால் அதன் காரணமாக, நான் அவளை கொலை செய்தேன் அவளால் மறக்க முடியாத வலியை கொடுத்தேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும் சில மணி நேரம் கழித்து சுபாஷின் உடல் சிதைந்த நிலையில் ரயில் தண்டவாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றம் சுமத்தப்பட்டவருக்கும் 25 வயது பெண்ணுக்கும் இடையிலான காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றன இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று மாவட்ட காவல் துறை தெரிவித்திருக்கிறது. அதோடு இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தி குடும்பத்திற்கு நீதி பெற்று தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.