fbpx

#Flash: தொடர்ந்து உச்சத்தில் செல்லும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை…! 42 பேர் உயிரிழப்பு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 18,257 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 42 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 14,553 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,36,22,651 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,29,68,533 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,428 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,98,76,59,299 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,21,164 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Vignesh

Next Post

தீவிரமடைந்த பருமழை..! வேகமாக உயரும் அமராவதி அணையின் நீர்மட்டம்..!

Sun Jul 10 , 2022
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அமராவதி அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த 2 மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 946 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு, […]
தீவிரமடைந்த பருமழை..! வேகமாக உயரும் அமராவதி அணையின் நீர்மட்டம்..!

You May Like