fbpx

கொரோனா காரணமாக ஒரே நாளில் 68 பேர் மரணம்…! பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு…?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 10,256 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 68 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 94,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,43,89,176 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,37,70,913 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,27,556 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,11,14,94,639 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 31,60,292 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

செப்.7ஆம் தேதி வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்..! தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Fri Aug 26 , 2022
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடந்த இத்தேர்வை தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மாணவர்கள் எழுதினர். மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 329 மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 95 சதவீதம் […]

You May Like