fbpx

இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வைரஸ் பாதிப்பு….! நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை…?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 13,086 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 19 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 12,456 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,35,31,650 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,28,91,933 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,25,242 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 1,98,09,87,178  கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11,44,805 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும், கொரோனோ பரவாமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: “அறிய வாய்ப்பு” ஆசிரியர்களுக்கு மொத்தம் 13,331 காலிப்பணியிடங்கள்…! நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

Vignesh

Next Post

’உடனே விடுவிக்க நடவடிக்கை தேவை’..! மத்திய அரசுக்கு அண்ணாமலை அவசர கடிதம்..!

Tue Jul 5 , 2022
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில், ”இலங்கை கடற்படையினரால் கடந்த 8 ஆண்டுகளில் கைது செய்யப்பட்ட 2,977 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு தமிழக பாஜக சார்பில் நன்றியை தெரிவித்துக் […]
அடுக்கடுக்கான புகார்கள்..!! ஆப்பு வைக்கும் டெல்லி தலைமை..!! பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கம்..?

You May Like