fbpx

இந்தியா-நியூசி 3-வது டி20 : மழையால் ஆட்டம் டை! இந்தியாவுக்கு வெற்றி!!

இந்தியா நியூசிலாந்து ஆடிய 3-வது டி20 போட்டி மழையால் தடைபட்ட நிலையில் இன்றைய ஆட்டம் டை ஆனது. இதையடுத்து இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்றைய ஆட்டத்தின் முதலே மழை குறுக்கிட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட் செய்தது. ஹர்திக் தலைமையில் இந்தியா விளையாடியது. நியூசிலாந்தின் தொடக்க வீரர் கான்வே 49 பந்துகளில் 59 ரன் எடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. 19வது ஓவரில் இந்திய அணி ஹட்ரிக் விக்டெ் வீழ்த்தி போட்டியை தன் பக்கம் சாய்த்தது.

நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணிக்கு 161 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை துரத்திய நிலையில் இந்தியா 9 ஓவர்கள் விளையாடியபோது மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது.

டிஎல்எஸ் முறைப்படி 9 ஓவர்களுக்கு 75 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சரியாக 75 ரன்கள் எடுத்திருந்தது. எனவே மேற்கொண்டு தொடர முடியவில்லை. இதனால் டை ஆனதாகஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

நியூசிலாந்துடன் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி மழையால் தடைபட்டது. இரண்டாவது போட்டியில் அனுபவம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இளம் இந்திய அணி அடித்த நொறக்கி, சூர்ய குமாரின் அதிரடியால் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்றைய மூன்றாவது பேட்டி டக்ஸ்வொர்த் முறைப்படி டை ஆனதால் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

Next Post

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி…

Tue Nov 22 , 2022
தருமபுரியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 குரூப்-2 ஏ முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்த்தின் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. […]

You May Like