fbpx

ரூ.122 கோடி செலவில் 5 மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு…! தமிழக அரசு அரசாணை வெளியீடு…!

5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.

தீவிர சிகிச்சைப் பிரிவு என்பது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நோயாளிகளைக் கவனிக்க வேண்டி அவர்களைத் தனிப் பிரிவில் இருக்க வைத்து, சிறந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரால் சிகிச்சை அளிக்கப்படும் இடம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படும் என கடந்த 2024-25ம் ஆண்டின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில், 5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைப்பதற்காக ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; 5 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் 3 மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் உள்ளிட்டவைகள் அமைக்க ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை, மேட்டுபாளையம் அரசு மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய 5 அரசு மருத்துவமனைகளில் தலா 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு ஏற்படுத்தபடவுள்ளது.

கும்பகோணம், தென்காசி, காங்கேயம் ஆகிய 3 அரசு மருத்துவமனைகளில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Intensive care units in 5 hospitals and integrated public health laboratories in 3 hospitals

Vignesh

Next Post

மகா கும்பமேளாவில் 50,000க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினரைவிட்டு பிரிந்த சோகம்!. வெளியான தகவல்!

Mon Mar 3 , 2025
Tragedy as more than 50,000 people were separated from their families at the Maha Kumbh Mela!. Information released!

You May Like