fbpx

மீண்டும் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்ட இ.விகே.எஸ்.இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை…..! காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு….!

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி உடல்நல குறைவு காரணமாக, உயிரிழந்தார். இந்த நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சென்ற மாதம் 27ஆம் தேதி அந்த இடைத்தேர்தல் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஆனால் துரதிஷ்டவசமாக சென்ற வாரம் அவருக்கு XBB வகை நோய்த்தொற்று பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்வதற்கு முடியாமல் அவதிக்குள்ளானார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தம் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

இதன் பின்னர் அவர் உடல் நலம் தேறி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த சூழ்நிலையில், தற்சமயம் அவர் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. நோய் தொற்றிலிருந்து குணமடைந்து நலமுடன் இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சமீபத்தில் அவர் வீடியோ மூலமாக தெரிவித்து இருந்தார். இத்தகைய சூழ்நிலையில், இன்று மறுபடியும் அவர் ஐ.சி.யூ.வில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Next Post

வாட்ஸ்அப்-ல் அவதூறான செய்தி பதிவிட்ட நபருக்கு மரண தண்டனை.. பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு...

Sun Mar 26 , 2023
பாகிஸ்தானில் ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் அவதூறான செய்தி பரப்பிய முஸ்லிம் நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தலகாங்கில் வசிக்கும் முஹம்மது சயீத் என்பவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு, சையத் முஹம்மது ஜீஷான் என்பவர் மீது புலனாய்வு அமைப்பில் புகாரளித்திருந்தார்.. அந்த புகாரில், சையத் முஹம்மது ஜீஷான் வாட்ஸ் அப் குரூப்பில், அல்லாவை பற்றி அவதூறான உள்ளடக்கத்தை இடுகையிட்டதாக தெரிவித்திருந்தார்.. இதையடுத்து சையது முகமது […]

You May Like