fbpx

’கால்நடை வளர்ப்பிற்கு வட்டியில்லா கடன்’..! – கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா பயிர்க்கடன் கடந்த ஆண்டை விட ரூ.1300 கோடி அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ”கடந்த ஆண்டு ரூ.407 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.1764 கோடி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் வட்டியில்லா கடன் போன்று, கால்நடைகளை மேய்ப்பதற்கு நிலம் இல்லாதவர்களும் தங்களது கால்நடைகளை வளர்ப்பதற்கு தீவனம் வாங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்தாண்டு ரூ.263 கோடி தற்போது வரை கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

’கால்நடை வளர்ப்பிற்கு வட்டியில்லா கடன்’..! - கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

மேலும், 5 சவரன் வரை நகை அடமானம் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நகை கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியில் நடைபெற்றது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க கடன் வழங்குவதற்கு உரிய விதிமுறைகளை கடைபிடிக்கவும், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நடைக்கடன் ஆடிட் செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

Chella

Next Post

வீட்டு மனையை அளவீடு செய்ய தாமதப்படுத்திய தாசில்தாருக்கு; நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு...

Tue Jul 26 , 2022
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நல்லூர் நேரு நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு புஞ்சை புளியம்பட்டியில் 227 சதுர மீட்டர் மனை இடம் உள்ளது. இந்த இடத்துக்கு வரைபடம் தயார் செய்வதற்காக இடத்தை அளந்து அத்துமால் காண்பிக்க சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். இதற்கான கட்டணமாக கடந்த 2020-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி 400 ரூபாயை வங்கி மூலம் செலுத்தினார். இருந்தும் அவரது மனு மீது வட்டாட்சியர் […]

You May Like