fbpx

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையா…?

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு நாளை தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார். இதனால் ஜூன் 17 அன்று பக்ரீத் பண்டிகைக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் திறந்து இருக்குமா..? என்று மது பிரியர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து, பள்ளி, கல்லூரி, வங்கி, அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே விடுமுறை, டாஸ்மாக் வழக்கம்போல் இயங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary

It has been announced that Tasmac will operate as usual across Tamil Nadu tomorrow on the occasion of Bakrit.

Vignesh

Next Post

வாவ்...! பட்டா மாறுதல் உள்ளிட்ட விவரம்... இலவசமாக ஆன்லைன் மூலம் பார்க்கலாம்...!

Sun Jun 16 , 2024
"Tamil Nilam" information related to land size through Tamilnilam app.

You May Like