கோடைக்காலத்தில் ஆண்கள் பின்பற்ற வேண்டிய சரும பராமரிப்பு வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
கோடைகாலம் வந்து விட்டாலே வழக்கத்தைவிட அதிகமான சரும பராமரிப்புகளை மேற்கொண்டால் மட்டுமே நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். கோடையின் வெப்பத்தில் நமது சொருகும் சருமம் அதிக வரட்சியுடன் புற ஊதாக்கதிர்களினால் பாதிக்கப்பட்டும், அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். அதனை தடுக்க ஆண்களுக்கான ஸ்கின் கேர் டிப்ஸை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.சூரியனிலிருந்து வெளி வரும் புற ஊதா கதிர்கள் கோடை காலங்களில் மிக அதிக அளவில் நம்மை தாக்கும். இவை நமது சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்து இளமையாக காட்சியளிக்க வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் அப்ளை செய்வது மிகவும் நல்லது.
வெயில் காலங்களில் அதிக வியர்வை நமக்கு உண்டாக்கும். மேலும் நமது சருமத்தில் சுரக்கும் எண்ணெய் சுரப்பிகளும் அதிக அளவில் வேலை செய்ய துவங்கும் இதன் காரணமாக அதிக அளவிலான மாசுக்கள் சருமத்தில் தேங்கி பாக்டீரியாக்கள் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.வ்வொரு இரண்டு நாட்களுக்கும் ஒரு முறை டீ டான் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்ல சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இயற்கையாக சுரக்கும் எண்ணெய் சுரப்புகளை சரி செய்யும். முக்கியமாக கோடைகாலங்களில் வெந்நீரில் முகம் கழுவுவது தவிர்க்க வேண்டும்.
நமது சருமத்தில் உள்ள நச்சுக்களை அவ்வபோது வெளியேற்றும் போது அவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக கோடை காலங்களில் இதை செய்ய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் கோடையில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் சுரப்பதாலும், அதிக அளவில் இறந்த செல்கள் நமது சருமத்தில் தேங்குவதாலும் அவை சருமத்தில் உள்ள நுண்துளைகளில் சேர்ந்து பாதிப்பை உண்டாக்கும்.சருமத்தில் தேங்கி இருக்கும் இருந்த செல்களை நீக்குவதன் மூலமும் நன் துளைகலில் இருந்து அந்த நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமும் நமது சருமத்தை பளபளப்புடனும் மென்மையாகவும் வைத்திருக்க முடியும்.
நமது சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில் நாம் நீர்ச்சத்துடன் இருக்க வேண்டியது அவசியம் ஆனது. குறிப்பாக கோடையின் வெப்பத்தில் நமது சருமம் மிக எளிதாகவே வறட்சி அடையவும், அரிப்பு எரிச்சல் ஆகியவை உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். எனவே இவற்றில் இருந்து தப்பிக்க அவ்வபோது மாய்சுரைஸர்களை பயன்படுத்தலாம். குறிப்பாக ஹையாலூரணிக் அமிலம் கலந்த மாய்சுரைஸர்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது.ஆண்கள் தங்களது தாடியில் பியர்ட் லோஷன் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் உள்ள சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பியர்ட் லோஷன்களில் ஆல்பா பிசா போலோல், வைட்டமின் இ, பாதாம் எண்ணெய் கலந்த லோஷங்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது.