fbpx

இந்தியாவில் பரவியது ஜாப்பானிய மூளைக்காய்ச்சல்!. டெல்லியில் ஒருவருக்கு சிகிச்சை!. அறிகுறிகுள் இதோ!

Japanese Brain Fever: ஜப்பானில் தோன்றிய ‘ஜேப்பனீஸ் என்சபாலிடிஸ்’ என்ற வைரஸால் பாதிக்கப்பட்டு டெல்லியில் ஒருவர் சிகிச்சை பெற்றுவருகிறார்.

ஜப்பானிய மூளைக் காய்ச்சல் என்பது, ‘கியூலெக்ஸ்’ என்ற கொசுவால் பரவக் கூடியது. ‘ஜேப்பனீஸ் என்சபாலிடிஸ்’ என்ற வகை வைரஸ், நீர்நிலை பறவைகள் மற்றும் பன்றிகளில் தொற்றும். பன்றிகளில் இருந்து கொசுக்கள் வாயிலாக இந்த வைரஸ் மனிதர்களை தாக்கக் கூடும். மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவாது.

ஜப்பானில் முதல் முறையாக, 1871ல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், தீவிர காய்ச்சல், உடல் வலி, நரம்புகள் பிரச்னை போன்றவை ஏற்படும். நரம்பியல் பிரச்னைகளை தீவிரமாக்கி, மூளையைத் தாக்கி உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது. நம் நாட்டில், 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில், 1,548 பேருக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்பு கடந்தாண்டு உறுதி செய்யப்பட்டது. இதற்கு தடுப்பூசி உள்ளது. ஆனால், குறிப்பிட்ட சிகிச்சை ஏதும் இல்லை.

இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த 72 வயது முதியவர், சமீபத்தில் ஏற்பட்ட தீவிர காய்ச்சலுக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. சிகிச்சைக்குப் பின், அவர் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி அரசின் சுகாதாரத் துறை ஆகியவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளன. கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுடன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.

Readmore: நீங்க அதிகமா குறட்டை விடுவீங்களா? அப்போ டெய்லி இத ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க..

English Summary

Japanese encephalitis spread in India! Treatment for someone in Delhi! Here are the signs!

Kokila

Next Post

கொட்டித்தீர்த்த கனமழை!. மண்ணில் புதைந்த வீடுகள்!. குழந்தைகள் உட்பட 30 பேர் பலி!. மேலும் அதிகரிக்கும் அச்சம்!

Fri Nov 29 , 2024
Heavy rain! Houses buried in the soil! 30 people including children were killed. And increasing fear!

You May Like