திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவருக்கு 22 வயது ஆகும் நிலையில், லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், 13 வயது பள்ளி மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர்.
பின்னர், மாணவியிடம் பல ஆசைவார்த்தைகளை கூறி காதலிப்பதாக சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மாணவியும் காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில், மாணவியிடம் நைசாக பேசி, அவரை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இதுகுறித்து பெற்றோர் விசாரித்துள்ளனர்.
பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளனர். செய்யாறு அரசு மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து மாணவியை திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் சத்தியமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை..!! ரூ.64,000-ஐ நெருங்கியது..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?