நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் இந்திய அரசியல் கட்சிகள் பலவும் இப்போதே ஈடுபட துவங்கிவிட்டனர். கூட்டணி பேச்சு வார்த்தைகள், மக்களுக்கான திடீர் அறிவிப்புகள் என்று பரபரப்பு ஏற்பட துவங்கியுள்ளது.
இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டணி வைக்க பல முன்னணி கட்சிகளை மறைமுகமாகவும், நேரடியாகவும் அழைப்பு விடுத்து வருகின்றார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தமிழகத்திற்கும் வர உள்ளார்.
மேற்குவங்க ஆளுநராக இருக்கும் இல.கணேசன் வீட்டில் நடக்கும் விசேஷத்தில் பங்கேற்க மம்தா பானர்ஜி தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில், அவர் அடுத்ததாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்திக்க இருக்கிறார். அவரது முகாம் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது
இதில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின்-உடன் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. திமுக மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே அவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளாராம்.