fbpx

நள்ளிரவில் திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்த இளைஞரை பதறி அடித்து ஓட வைத்த வீட்டின் உரிமையாளர்…..! அப்படி என்ன நடந்திருக்கும்…..?

நள்ளிரவு நேரத்தில் திருடுவதற்காக வீட்டிற்குள் நுழைந்த மர்மநபரை அந்த வீட்டிற்குள் இருந்த 53 வயது பெண் ஒருவர் சொன்ன ஒரே வார்த்தையால், பதறியடித்து, வீட்டை விட்டு ஓடிய இளைஞரால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் திருடுவதற்காக வந்த ஒரு இளைஞரை வீட்டுக்குள் இருந்த ஒரு 53 வயது பெண் தலை தெரிக்க ஓட விட்டுள்ளார். மும்பையை அடுத்துள்ள போரிவலி என்ற பகுதியை சேர்ந்த 53 வயது பெண் அந்தப் பகுதியில் 30 வருடங்களாக வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் கணவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்னரே இயற்கை எய்தி விட்டார். இவருடைய மகனும், மருமகளும் வெளிநாட்டில் வசித்து வருகிறார்களாம். ஆகவே, இவர் வீட்டின் தரைதளத்தில் தனியாகத்தான் வசித்து இருக்கிறார், இந்த நிலையில் தான், சென்ற 14ஆம் தேதி இவருடைய வீட்டில் இவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது, நள்ளிரவு 2 மணி அளவில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

அதாவது, நள்ளிரவு நேரத்தில் இவரது வீட்டிற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்தார். அவருக்கு 20 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் முகக்கவசம் அணிந்து கொண்டிருந்தார். அப்போது ஏதோ சத்தம் கேட்டு கண்விழித்த அந்த பெண் எழுந்து வந்து பார்த்தபோது, ஜன்னல்கள் திறந்திருந்தனர். வீட்டின் நடுஹாலில் அந்த இளைஞர் நின்று கொண்டிருந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், உடனே நீ எப்படி வீட்டிற்குள் வந்தாய்? என்று கேட்டுள்ளார். அதற்க்கு அந்த நபர் எந்தவிதமான பதிலையும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் போதையில் இருந்தது. அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது. கேள்வி எழுப்பிய போது, அந்த பெண்ணிடம் அந்த இளைஞர் நெருங்கி வந்துள்ளார். அப்போது அந்தப் பெண் சாமர்த்தியமாக ஒரு பதிலை வழங்கியிருக்கிறார்.

அதாவது தனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது என்று அந்த பெண்மணி தெரிவித்துள்ளார்.மேலும், என் அருகில் வந்தால், ரத்தத்தை எடுத்து உன் மீது பூசிவிடுவேன் என்று அந்த இளைஞரை பயமுறுத்தியதால் பயந்து போன அந்த மர்ம நபர், அந்த பெண்ணை வீட்டிற்குள்ளே தள்ளி, கதவை தாழிட்டு விட்டு, தப்பிச் சென்று விட்டார். அதன் பிறகு அந்த பெண் கதவை திறக்குமாறு தன்னுடைய அண்டை வீட்டாருக்கு தெரிவித்ததும், அவர் வந்து வீட்டை திறந்து விட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் வழங்கப்பட்டுள்ளது.

Next Post

சூப்பர் வாய்ப்பு...! 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகை...! முழு விவரம்...

Tue Aug 22 , 2023
தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ், அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகைத் திட்டத்தை அஞ்சல் துறை 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டில் இத்திட்டத்தில் பயன் பெற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6000/- உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர் இந்தியாவிற்குள் […]

You May Like