fbpx

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைப்பதற்கு இவ்வளவு ஈஸியான வழிகளா….? நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே….!

நம்முடைய உடலுக்கு கொழுப்பு சத்து என்பது அவசியம் தான். ஆனால், அதிலும், நல்ல கொழுப்பு சத்து, கெட்ட, கொழுப்பு சத்து என்று இருவகை இருக்கிறது. அதில் கெட்ட கொழுப்பு சத்து அதிகமாக இருந்தால், அது உடலுக்கு நன்மை பயக்காது. இதன் காரணமாக, உடல் நலக்குறைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அந்த கெட்ட கொழுப்பு சத்தை குறைத்து, நல்ல கொழுப்பு சத்தை அதிகரிப்பதற்கு, என்ன செய்யலாம்? என்பது பற்றி தற்போது நாம் பார்க்கலாம்.

பலர் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியாமல், தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கெட்ட கொழுப்பு அதிகரித்திருக்கிறது என்று அர்த்தம். இதனால், பிபி மற்றும் சுகர் போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்படலாம். இந்த கெட்ட கொழுப்பு சத்துக்கள் உடலில் அதிகரிக்காமல் இருப்பதற்காக நாள்தோறும் காலை உணவில் தானியம், சஜ்ஜா, ஓட்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் அக்ரூட் போன்ற பருப்பு வகைகளில், கெட்ட கொழுப்பை குறைப்பதற்கான கொழுப்பு சத்துக்கள் இருக்கின்றன. அவற்றை சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது. அறை வெப்பநிலையில் உறைய வைக்காத சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவை கெட்ட கொழுப்புகளை வெகுவாக குறைக்கின்றன.

இனிப்பில்லாத பால், வெண்ணெய், பாமாயில் மற்றும் இறைச்சி போன்றவை கெட்ட கொழுப்புகளை அதிகரிக்கும். ஆகவே, அவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், பணியின் அழுத்தம் சாதாரணமாக, இருப்பதால், ரத்த அழுத்த பிரச்சனைகள் உண்டாகும். அதனை தவிர்க்க, அனைவரும் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Next Post

இந்த ஆண்டு முதல் 7-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் சேர்க்கப்படும்...! மத்திய அரசு தகவல்...!

Tue Aug 29 , 2023
தேசிய போர் நினைவிடம் – ‘நமது துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை’ என்ற அத்தியாயம் இந்த ஆண்டு முதல் 7-ம் வகுப்பின் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே தேசபக்தி, கடமையுணர்வு மற்றும் துணிச்சல் மற்றும் தியாகம் போன்ற அம்சங்களை வளர்ப்பதும், தேசத்தை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் ஆகும். இந்த அத்தியாயம் தேசிய போர் நினைவிடத்தின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருத்தை எடுத்துக்காட்டுகிறது, மேலும் சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் சேவையில் […]

You May Like