fbpx

இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரால் கன்னியாகுமரியில் பரபரப்பு…..!

கேரள மாநில மாணவி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பார்க்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சாம் இவருடைய நண்பர்கள் அகிலேஷ் ஷாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா, தினேஷ், சுருதி, சிதார்த். இதில் அஜின் சாம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாக்ராம் மூலமாக களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த பிளஸ்1 மாணவியிடம் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் அந்த மாணவியை திருமணம் செய்வதாக அந்த இளைஞர் வாக்குறுதி வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி காரு களியக்காவிளை பகுதிக்கு வந்த மதியின் மற்றும் அவருடைய நண்பர்கள் மாணவியை உடன அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு நெய்யாற்றின் கரையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அடைத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

அங்கே அஜின் சாம் மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார். கடந்த 18ஆம் தேதி அந்த மாணவியை அவருடைய வீட்டு அருகே விட்டு விட்டு சென்றுவிட்டார். மறுநாள் முதல் அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த அந்த மாணவி இந்த சம்பவம் குறித்து தன்னுடைய உறவினர்களிடம் கூறியுள்ளார். உடனடியாக களியக்காவிளை அருகே உள்ள பாடசாலை காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்கள். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு எர்ணாகுளத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட 5 நபர்களையும் கைது செய்து இருக்கிறார்கள்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பெண் நண்பர்களையும் அவர்கள் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த கும்பலால் வேறு பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

12 மணி நேர வேலை மசோதா..!! அமைச்சர்கள் அவசர ஆலோசனை..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

Mon Apr 24 , 2023
12 மணி நேர வேலை மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா, பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் அமலில் இருந்து வரும் நிலையில், அதை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தொழிலாளர் நலத்துறை […]

You May Like