fbpx

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி……! ஆஸ்திரேலியா அணி டாஸ் என்று பேட்டிங் தேர்வு….!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.

இந்த நிலையில், இந்த இரு அணிகளும் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் ஆரம்பமானது இந்த போட்டியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பானிசும் நேரில் கண்டு களித்து வருகிறார்கள். இந்த நிலையில் மைதானத்தில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மேலும் மைதானத்திற்கு வந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பிரதமர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மைதானத்திற்குள் சிறப்பு வாகனத்தில் வந்த இருநாட்டு பிரதமர்களும் அரங்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு கைது அசைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஸ்மித் உள்ளிட்டோருக்கும் இருநாட்டு பிரதமர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Next Post

தாஸ் திரைப்பட கதாநாயகி ரேணுகா மேனனை நினைவு இருக்கிறதா……? திருமணத்திற்கு பின் எப்படி இருக்கிறார்…..?

Thu Mar 9 , 2023
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ கதாநாயகிகள் வந்து போகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள் சிலர் தற்போது சினிமா பக்கமே வருவதில்லை. அப்படி தமிழ் திரை உலகில் ஜெயம் ரவி ,ஆர்யா உள்ளிட்டோரின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்தான் ரேணுகா மேனன். பரத் நடித்த பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ரேணுகாமேனன், தாஸ், கலாபக் காதலன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், மலையாளத்திலும் சில படங்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

You May Like