விழுப்புரம் மாவட்ட பகுதியில் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஞானசேகர் (26). இவர் நீலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, மாணவியை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்து அதை வைத்து அந்த பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவி தன் பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் செஞ்சி பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞானசேகர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.