fbpx

காதலை பிரேக்கப் செய்ததால் 16 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்த இளைஞர் போக்சோவில் கைது!

சிதம்பரம் அருகே கொத்தனார் வேலை செய்து வரும் மணிகண்டன் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த காதலர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த 16 வயது சிறுமி மணிகண்டனை விட்டு விலகிச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த 16 வயது சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தவறான முறையில் மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளார்.

மணிகண்டனை காதலித்து வந்த 16 வயது சிறுமிக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அந்த சிறுமி மணிகண்டன் உடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த சிறுமியின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமி இது தொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இதனை தொடர்ந்து மகளிர் காவல் துறையினர் மணிகண்டனை சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Next Post

குமரியை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

Sun Dec 25 , 2022
தற்போதைய நிலையை பார்த்தால் பொங்கல் பண்டிகை முடியும் வரையில் கூட மழை பொழிவு இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனென்றால் வங்கக்கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் மழைபொழிவு சற்றே குறைவாக இருந்தாலும் கூட தென்தமிழகத்தில் மழையின் அளவு சற்று அதிகமாக காணப்படுகிறது. வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கன்னியாகுமரியை நெருங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக […]

You May Like