fbpx

பெரம்பலூர் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது……!

நாட்டில் நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பள்ளி குழந்தைகளுக்கு நேரிடும் இது போன்ற அவல நிலையை நினைத்தால் நெஞ்சம் பதை பதைக்கிறது.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்த பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர் செல்வகுமார்.

அதே பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் இவர் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஆசிரியர் செல்வகுமார் மீது புகார் எழுந்தது. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் புகார் வழங்கினர்.

இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளே காவல் நிலையத்தில் புகார் வழங்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் செல்வக்குமாரை விசாரித்தபோது அவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியது உறுதி செய்யப்பட்டதன் காரணமாக, அவர் மீது பெரம்பலூர் மாவட்ட மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Next Post

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்..!! இவர்கள் யாரும் தொகுதியில் இருக்கக் கூடாது..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

Sat Feb 25 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், ”வாக்காளர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 547 வழக்குகள் மதுவிலக்கு […]

You May Like