கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்திருக்கிறது. மத்திய அரசின் பண மரபியல் மற்றும் மர பெருக்கு நிறுவனம் இந்த நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்காக இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டனர். நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தார்கள்.
எழுத்து தேர்வு கடந்த மாதம் 4ம் தேதி கோவையில் நடந்தது. தேர்வு எழுத வந்தவர்களின் புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த பணிக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றது இதில் பங்குபெற்ற 4 பேரின் புகைப்படம் மற்றும் கைரேகை உள்ளிட்டவை மாறுபட்டு காணப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஆங்கிலத்தில் பேசவும், எழுதிக் காட்டவும் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதனை செய்ய முடியாமல் திணறித்தான் போயினர். அவர்கள் ஆள்மாறாட்டம் செய்து எழுத்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே இந்த சம்பவம் தொடர்பாக பண மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குனர் குனிகண்ணன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதனை அடிப்படையாகக் கொண்டு ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆர்மித்குமார் (30), எஸ் அமித்குமார்(26), அமித்(23), சுலைமான் (25) உள்ளிட்டோரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.