கோபத்திற்கு ஒரு மனிதனை மிருகமாக மாற்றும் சக்தி இருக்கிறது என்ற வாசகத்தை நிரூபிக்கும் விதத்தில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளனர். சாதுவாக இருக்கும் பலரும் கோபம் என்று வந்துவிட்டால் மிருகத்தை விட கொடூரமான முறையில் நடந்து கொள்வார்கள்.
அந்த வகையில், குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கிஷோர்(33) இவருடைய மனைவி காஜல் இருவரும் மும்பையில் உள்ள வைர நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். காஜல் ஏற்கனவே திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு முன்னர் கணவரை இழந்தவராவார்.
இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்ட காரணத்தால், இரு குடும்பத்தாரின் ஒப்புதல் உடன் சென்ற வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணம் முடிவடைந்த பிறகு சூரத் புறநகர் பகுதியில் இருக்கின்ற கட்டர்கிராமில் வசித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்தபோது கிஷோர் ஆபாச வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அதனை மனைவி பார்க்க வேண்டாம் என்று கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மறுநாள் திங்கள்கிழமை காலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து உள்ளது. அப்போது ஆத்திரம் கொண்ட கிஷோர் தன்னுடைய மனைவியை தீவைத்து கொளுத்தி இருக்கின்றார்.
இந்த நிலையில், சென்ற புதன்கிழமை அன்று காவல்துறையினருக்கு இந்த தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக காவல்துறையினர் குறைந்து சம்பவ இடத்திற்கு சென்று கிஷோர் படேலை கைது செய்தார்கள். 40% தீக்காயம் அடைந்த அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.
ஆனால் அங்கே சிகிச்சை பலனின்றி காஜல் பரிதாபமாக உயிரிழந்தார். முன்பே அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததால் அவரை காப்பாற்ற இயலாமல் போய்விட்டது என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அந்தப் பெண் வழங்கிய கடைசி வாக்குமூலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தன்னுடைய கணவர் பான் வீடியோக்களை பார்த்து கொண்டு இருந்தார். எனவும் அவரை வீடியோவை நிறுத்த சொன்னதன் காரணமாக, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது எனவும் கூறியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
சென்ற சில மாதங்களாகவே கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கொண்டு இருந்ததும் காவல்துறையினரின் விசாரணையின் மூலமாக தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து பட்டேலை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.