fbpx

தங்கையின் மீது ஏற்பட்ட காதல்….! சம்மதம் தெரிவிக்காத தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வளர்ப்பு மகன்….! விழுப்புரம் அருகே பரபரப்பு….!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்துள்ள கடையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(40) இவர் அதே கிராமத்தில் காப்புக்காடு அருகே விவசாயம் செய்து வருகிறார் இவருடைய மனைவி கலையம்மாள்(32) இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளிட்டோர் இருக்கின்றன. இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பாரதி (23) என்பவர் சிறு வயதிலேயே தன்னுடைய தாயை இழந்து தந்தையும் கண்டு கொள்ளாத நிலையில் இருந்தார். இத்தகைய நிலையில்தான் கோவிந்தன் பாரதியை வளர்ப்பு மகனாக வளர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

கோவிந்தனின் நிலம் ஊருக்கு எல்லை பகுதியில் காப்புக்காடு அருகே இருக்கிறது. இவருடைய நிலத்திலேயே வீடும் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, பாரதி அடிக்கடி தந்தை வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு காட்டுப்பன்றி வேட்டைக்காக சென்று வருவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கோவிந்தனின் மூத்த மகள் மீது பாரதிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கோவிந்தனிடம் பாரதி கோவிந்தனின் பெண்ணை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதில் அந்த பெண்ணிற்கு விருப்பமில்லாத நிலையில், கோவிந்தன் பாரதியின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் இதனால் கோபமடைந்த பாரதி, நேற்று மாலை கோவிந்தன் வீட்டில் பால் கலந்து கொண்டிருந்தபோது வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கோவிந்தனின் தலையில் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கோவிந்தனின் சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த அவருடைய மனைவி வெளியே ஓடி வந்தார்.

இந்த நிலையில், அவரையும் நாட்டு துப்பாக்கியால் பாரதி காலில் சுட்டு இருக்கிறார். இருவரின் அலறல் சத்தமும் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து பாரதி நாட்டு துப்பாக்கியுடன் காப்பு காட்டில் ஓடி தப்பி சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தம்பதியினரை மீட்டு அவசர உறுதியின் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது அதோடு, இது தொடர்பான தகவல் அறிந்த, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில், துப்பாக்கியால் பெற்றோரை சுட்டு விட்டு தப்பிச்சென்ற வளர்ப்பு மகன் பாரதி அருகில் உள்ள காப்பு காட்டினுள் பதுங்கி இருக்கிறார். அவரை தேடி விழுப்புரம் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் காவல்துறையினர் காட்டுக்குள் சென்றுள்ளனர்.

காவல்துறையினர் வருவதை கண்ட பாரதி, காப்பு காட்டில் உள்ள பாறையின் மீது ஏறி, காவல்துறையினரை தான் வைத்துள்ள நாட்டு துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்றும், நாட்டு வெடிகுண்டை கையில் வைத்திருக்கிறேன், அதனை வீசிடுவேன் என்றும் கொலைமிரட்டல் விடுத்திருக்கிறார். அதன் பிறகு பாறைக்கு பின்புறமாக சென்று காப்பு காட்டில் மறைந்துள்ளார். இதனை தொடர்ந்து, தப்பிச் சென்ற அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றன.

Next Post

தமிழகத்தில் அதிகரிக்கும் கள்ளச்சாராய விற்பனை……! முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு…..!

Wed May 17 , 2023
தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதிலும் கள்ளச்சாராயத்தை குறித்த பலர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை தடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசும், காவல்துறையும் முடுக்கிவிட்டு இருக்கிறது. அது தொடர்பான நடவடிக்கை காவல்துறை தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் கள்ளச்சாராயம் மற்றும் […]

You May Like