பல பெண்கள் ஆண்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அதோடு அவர்கள் வெளியே சொல்ல முடியாத இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.
ஆகவே பெண்கள் அனைவரும், எப்போதும் அனைத்து விஷயங்களையும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
மதுரையை சார்ந்த ஒரு பெண் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பான புகாரை வழங்கினார். அந்த புகாரியில் மதுரையைச் சேர்ந்த நான் நெல்லை மாவட்டத்தில் வசித்து வருகிறேன்.
என்னுடன் ஏர்வாடி பகுதியை சேர்ந்த மத போதகர் சாமுவேல் என்பவர் 10 வருட காலமாக நட்பாக பழகி வந்தார்.
அத்துடன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து மனைவியை போல் அவர் வாழ்ந்து வந்தார் என்றும் அதோடு, எனக்கு தெரியாமல் சாமுவேல் சென்னையை சேர்ந்த பிளஸ்சி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டார் என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதோடு தன்னை திருமணம் செய்வதாக தெரிவித்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தது தொடர்பாக நான் கேள்வி எழுப்பியபோது தனக்கு திருமணமே நடைபெறவில்லை என்று தெரிவித்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் எனவும், நான் தொலைபேசியில் அவரிடம் உரையாடினால் தகாத வார்த்தைகளை பேசி என்னை திட்டுகிறார் எனவும், குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை ஆபாசமான முறையில் படம் பிடித்து வைத்திருக்கிறார் என்றும், அந்தப் புகார் மனுவில் அந்த பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஏதாவது பேசினால் அந்த புகைப்படங்களை வைத்து என்னை மிரட்டுகிறார் எனவும், எனக்கு பலமுறை பாலியல் துன்புறுத்தல் வழங்கி உள்ளார் எனவும், அவர் விருப்பத்திற்கு இணங்க மறுத்தால் என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார் எனவும் கூறியுள்ளார் அந்த பெண்மணி.
மேலும் சாமுவேல் தனக்கு குடும்ப கஷ்டம் என்று தெரிவித்து 2 லட்சம் ரூபாய் வரையில் என்னிடம் வாங்கி கொண்டு திருப்பி தர மறுத்து வருகிறார். எனவும் பணத்தை திருப்பி கேட்டால் அவருடைய மாமா முத்து ஜேம்ஸ் என்பவரை கொண்டு கொலை மிரட்டல் விடுக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
அதோடு, இது போன்ற பல்வேறு சம்பவங்களின் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். ஆனால் என்னை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி விட்டனர் என்னை போல இனி வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது.
என்னை ஏமாற்றிய அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளதாக உறுதி அளித்தார்.
இதற்கு நடுவே மதபோதகர் சாமுவேல் பணியாற்றி வந்த இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் பணியிட மாறுதல் செய்தது குறித்து கடந்த ஆகஸ்ட் மாதமே ராஜினாமா செய்ததாகவும், ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் பெயர்களாக பரவி வருகிறது இவர்களுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.