fbpx

மது வாங்கியதில் ஏற்பட்ட மோதல்…..! கூலி தொழிலாளியை கொலை செய்து தோட்டத்தில் வீசிய இளைஞரணி பொறுப்பாளர்கள் கோவையில் பரபரப்பு…..!

கோயமுத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள கரடிமடை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55) அதே பகுதியில் மது வாங்கியுள்ளார். அதாவது, கரடி மடை பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் கோகுல் உள்ளிட்ட இருவரும் காலம் பாளையம் பகுதியில் மதுபான கடை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

காளம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வரும் இருவரும் கரடிமடை பகுதிக்குள்ளும் சட்ட விரோதமாக மதுவை விற்று வந்ததாக சொல்லப்படுகிறது.

இத்தகைய நிலையில், காளம்பாளையம் மதுபானக்கூடத்தில் செல்வராஜ் மது வாங்கிய போது ராகுல் மற்றும் கோகுலுக்கு இடையே தகராறு உண்டாகி இருக்கிறது. இதனால், செல்வராஜ் கரடிமடை பகுதிக்கு சென்று விட்டார். ஆகவே அவரை பின்தொடர்ந்து வந்த ராகுல் மற்றும் கோகுல் உள்ளிட்ட இருவரும் செல்வராஜை அடித்து இழுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

செல்வராஜை அடித்து இழுத்துச் சென்ற இருவரும், அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து செல்வராஜை சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆகவே பயந்து போன இருவரும், அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். அந்த வகையில், நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சடலமாக கிடந்த செல்வராஜின் உடலைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பேரூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதனை அடிப்படையாகக் கொண்டு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு கோகுல் மற்றும் ராகுல் இருவரும் பொதுமக்கள் இருக்கும்போதே அவர்களுடைய முன்னிலையில், செல்வராஜை தாக்கி இழுத்துச் சென்றதை பொதுமக்கள் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்திருக்கிற பேரூர் காவல்துறையினர், அப்பாவி கூலி தொழிலாளியை கொலை செய்து தோட்டத்தில் வீசி விட்டு தலைமறைவாகி இருக்கின்ற திமுகவின் இளைஞரணி பொறுப்பாளர்களை வலை வீசி தேடி வருகின்றன.

Next Post

திருவண்ணாமலை அருகே…..! காவலரை தாக்கிய 3 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் அதிரடி கைது….!

Tue May 16 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பழகன்( 32). இவர் குப்பம் கிராமத்தில் மதுவிலக்கு கண்காணிப்பு பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது குப்பம் அரசு பள்ளி அருகே, 4 பேர் நிதானம் இழந்த நிலையில் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக சொல்லப்படுகிறது. அவர்களுடைய செயலை கண்டித்து காவலர் அன்பழகன் எல்லோரையும் வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக, அன்பழகனுக்கும், […]

You May Like