fbpx

கோவையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பீஹாரை சேர்ந்த இளைஞர் அதிரடி கைது……! 2 கிலோ கஞ்சா செடி காவல்துறையினரால் பறிமுதல்…..!

கோயம்புத்தூர் பகுதியில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த இளைஞரை தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள். அதோடு, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா செடிகளையும் அவர்கள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

கோயமுத்தூர் மாவட்டம் கோவில் பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேரையாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு சேரையான் பாளையம் பகுதியில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு மற்றும் ரவுண்டு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

காவல்துறையினரின் கண்காணிப்பில் அந்த பகுதியில் இருந்த ஒரு வீட்டில் அருகே உள்ள தோட்டத்தில் காலி இடத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, கஞ்சா செடி வளர்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தை சேர்ந்த பிண்டு கேவட் என்ற நபர் என்பது சேரயாம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தனியார் நிறுவனங்களுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் பணியை செய்து வந்ததும் தெரியவந்தது.

அத்துடன் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததும் காவல்துறையினரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சா செடியை வளர்த்து தன்னிடம் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய அவர் திட்டமிட்டிருந்ததும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

ஆகவே அவரை கைது செய்த காவல்துறையைச் சார்ந்தவர்கள் அவரிடம் இருந்து சுமார் 2 கிலோ எடையுள்ள கஞ்சா செடியை மறை முதல் செய்தனர் அதன் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்

Next Post

இந்த பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்..

Sat Mar 11 , 2023
புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.. சென்னையில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, ஆலோசனை பணிக்கு அண்மையில் டெண்டர் விடப்பட்டது.. இதற்கு தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.. இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. […]

You May Like