பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிகமாக நடைபெற்று வருகிறது.
இது போன்ற குற்றங்கள் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்தியாவில் தான் அதிகம் நடைபெறுகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும் இந்த குற்றங்கள் குறைவதில்லை. காரணம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல சட்டங்களை இயற்றினாலும் அந்த சட்டங்கள் கடுமையாக இல்லை என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது.
அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுக்கா வேட்டவலம் பூரிக்காரன் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகன் செந்தில்குமார்(38) இவர் அந்த பகுதியில் பானி பூரி கடை நடத்தி வருகின்றார் இவருக்கு 2️ பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், அந்த பகுதியில் வசித்து வந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர் ஒரு மாதம் மட்டுமே பள்ளிக்கு சென்று இருக்கிறார். அதன் பிறகு அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அந்த மாணவி செந்தில் குமாரின் பானிபூரி கடையில் பணியாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது.
அத்துடன் அந்த 17 வயது மாணவி பானி பூரி கடையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார் இந்த சூழ்நிலையில் தான் செந்தில்குமாரின் மனைவி சென்னைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பள்ளி மாணவி பாணி பூரி கடைக்கு வந்திருக்கிறார். தன்னுடைய மனைவி ஊரில் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட செந்தில்குமார் மாணவி வீட்டிற்கு சென்று பானிபூரிக்கு தேவையான உபகரணங்களை எடுத்து வருமாறு தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு செல்வகுமார் அந்த சிறுமியை பின்தொடர்ந்து வீட்டிற்கு சென்று மாணவி உள்ளே சென்றவுடன் கதவினை தாழியிட்டுக்கொண்டார்.
இதனால் பயந்து போன சிறுமி, அவரிடம் கதவினை திறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் செந்தில்குமார் கதவினை திறக்காமல் சிறுமியிடம் தகாத வார்த்தைகளை பேசி அந்த சிறுமியை திடீரென்று கட்டிப்பிடித்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இதனையடுத்து செந்தில்குமாரின் மனைவி ஊருக்கு சென்றுவிட்ட பிறகு அவர் வருவதற்கு 2 நாட்கள் ஆனதால் அந்த 17 வயது சிறுமியை மறுபடியும் மிரட்டி பலமுறை செந்தில்குமார் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அதன் பிறகு அந்த சிறுமியிடம் இது தொடர்பாக வெளியில் தெரிவித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த சிறுமியை செந்தில்குமார் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதோடு இந்த சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. அப்போது சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.
அங்கே சிறுமியை பரிசோதித்த மருத்துவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அந்த சிறுமி கர்ப்பமாக இருந்ததை அறிந்து கொண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பானிபூரி கடைக்காரர் செந்தில்குமார் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து சிறுமி மற்றும் அவருடைய பாட்டி உள்ளிட்டோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
இந்தப் புகாரை அடிப்படையாக வைத்து, மகளிர் காவல் துறையினர் ப்ரோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி பானிப்புரி கடைக்காரரை சிறையில் அடைத்தனர்.
இளம்பெண், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்டவற்றை தடுத்து நிறுத்துவதற்கு தங்களுடைய பிரச்சனைகளை நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு சிறப்பு ஏற்பாட்டை செய்திருக்கிறது. அதாவது, 9 444137000 என்ற தொலைபேசி எண்ணிலும், அதே போல 890396 5770 என்ற தொலைபேசி எண்ணிலும் இது போன்ற குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது