சென்னை ஆலந்தூர் கண்ணன் காலனி 5வது தெருவை சார்ந்தவர் விஜயன் (32) இவர் புதுப்பேட்டை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி இரவு தண்டிய மைத்துனர் வாசுதேவன் என்ற வருடம் பழவந்தாங்கல் காய்கறி சந்தைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது வாசுதேவனின் கைபேசியில் தொடர்பு கொண்ட அஜ்மல் என்ற நபர் தன்னை ஆலந்தூர் கண்ணன் காலனி மைதானத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குவதாக தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து, விஜயன் மற்றும் வாசுதேவன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த கும்பலை தட்டி கேட்டு இருக்கிறார்கள்.
அப்போது அந்த கும்பல் காவலர் விஜயன் மற்றும் வாசுதேவன் உள்ளிட்டோரை தாக்கி இருக்கிறது. இதில் காவலர் விஜயனின் நெற்றியில் காயம் ஏற்பட்ட சரிந்து விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த கும்பல் தப்பி சென்றுவிட்டது காயமடைந்த விஜயன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த வழக்கை கொலை முயற்சி வதற்காக பதிவு செய்து பரங்கிமலை காவல்துறையினர் காவலரை தாக்கிய விவகாரத்தில், அஜித், வினோத், விவேக் மற்றும் ரவிக்குமார் உள்ளிட்ட 4 பேரை கடந்த ஏழாம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் விஜயன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, கொலை வழக்கு பதிவு செய்த பரங்கிமலை காவல்துறையினர், தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு இந்த வழக்கில் ஆய்வு செய்யப்பட்டுள்ள அஜித் மற்றும் வினோத் இருவரும் ஏற்கனவே பழவந்தாங்கல் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளரை கல்லால் அடித்த வழக்கில் சிறைக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.