திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வளையப்பட்டி சேர்ந்தவர் தேவி(43) துறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் இவர் சித்திரப்பட்டி பகுதியில் தங்கி இருந்து டியூஷன் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவன் ஆசிரியை தேதியிடம் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன் இந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, அந்த மாணவனின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது திருச்சி மகளிர் சிறையில் அடைத்திருக்கிறார்கள்