திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் இருக்கக்கூடிய மலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சில மாணவ, மாணவிகள் கிரிசமுத்திரத்தில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்கள் இவர்கள் நாள்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் 8ம் வகுப்பு மாணவர்களான விஜய்(13), விஜய்(13), ரபிக்(13) உள்ளிட்ட மூவரும் மிதிவண்டியில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தார்கள்.
அப்போது வேலூரில் இருந்து ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 7️ பேர் ஏலகிரிக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக, சாலையில் தாறுமாறாக ஓடி சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3️ பள்ளி மாணவர்களின் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட 3️ பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதன் பிறகு முகத்தை உண்டாக்கிய அந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தை உண்டாக்கிய நபர்கள் அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன.
இதனை தொடர்ந்து விபத்தை உண்டாக்கிய காரை ஓட்டி வந்த தனியார் கல்லூரி மாணவன் சந்தோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு நடுவே உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நல்லா 2 லட்சம் ரூபாய் நிபாரண உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.