fbpx

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்ற நபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை…!

இயக்குனர் ஹரி இயக்கும் பல திரைப்படங்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் தான் படமாக்கப்படும்.

அந்தப் பகுதிகளில் படமாக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியையடையும். ஏனென்றால் கதைக்களம் முற்றிலுமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதியை சார்ந்திருக்கும். அதோடு அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அந்த கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போகும் அளவிற்கு தத்ரூபமாக இருக்கும்.

அதேபோலத்தான் கடந்த 2013 ஆம் வருடம் நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் இயக்குனர் ஹரி. அதில் தூத்துக்குடி துறைமுகம் மூலமாக போதை பொருள் இந்தியாவிற்கு வருவது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும்.

அதோடு, அந்த திரைப்படத்தின் கதை மிகவும் சுவாரசியமாகவும், பரபரப்பு நிறைந்ததாகவும், அதிரடி நிறைந்ததாகவும் காணப்படும்.

அதேபோல ஒரு சம்பவம் தற்போது தூத்துக்குடியில் உண்மையில் நடைபெற்றுள்ளது. அதாவது, தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயற்சி செய்த வழக்கில் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நபருக்கு 2 வருட கால சிறை தண்டனை விரித்து தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியை சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனதன் தோர்ன்(47). என்ற நபரை கியூ பிரிவு காவல் துறையினர் கடந்த வருடம் ஜூன் மாதம் 10ம் தேதி கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அவர் மும்பையில் போதை பொருள் கடத்தல் வடக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். என்பதும், சுமார் 70 நாடுகளுக்கு மேல் அவர் சென்று, வந்துள்ளதும் தெரியவந்தது. நோய் தொற்று ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படத்தின் மூலமாக தப்பிச்செல்ல முயற்சி செய்திருக்கிறார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

கியூ பிரிவு காவல் துறையினர் அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையிலடைத்தனர். வழக்கு விசாரணை தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நீதித்துறை நீதிபதி வந்து நடைபெற்று வந்தது. கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா நீதித்துறை நடுவர் வீசி குபேரசுந்தர் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

அந்த குற்றப்பத்திரிகை நகல் ஜோனதன் தோர்னுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் ஆங்கிலத்தில் குற்ற பத்திரிக்கை நகல் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆகவே ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி அவரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சாட்சிகள் விசாரணை நடந்தது. மொத்தம் 25 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த 28ஆம் தேதியுடன் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதித்துறை நடுவர் பி சி குபேரசுந்தர் தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் காவல்துறையின் தரப்பில் அரசு வழக்கறிஞர் முருகப்பெருமாள் ஆஜரானார் இந்த தீர்ப்பை தொடர்ந்து ஜோனாதன் மறுபடியும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Next Post

அடேங்கப்பா..!! 200 பில்லியன் டாலர்களை இழந்த ஒரே நபர்..!! எலான் மஸ்க்கின் புதிய சாதனை..!!

Sat Dec 31 , 2022
எலான் மஸ்க் தனது நிகர சொத்து மதிப்பில் 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட எலான் மஸ்க், தனது மொத்த சொத்து மதிப்பில் இருந்து சுமார் 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 51 வயதான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2021 நவம்பரில் 340 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. மேலும், […]

You May Like