fbpx

வாட்ஸ் ஆப்புக்கு இனி ‘நோ’ போன் நம்பர்.! வர இருக்கும் புதிய அப்டேட்.! இதன் சிறப்பம்சங்கள் என்ன.?

இன்றைய நவீன உலகில் தகவல் தொடர்புக்கு பல்வேறு மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலி வாட்ஸ் ஆப். இந்த செயலியில் குறுஞ்செய்திகள் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் போன்ற வசதிகளும் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பரிமாறிக் கொள்ளும் வசதிகளும் இருக்கிறது.

வாட்ஸ் ஆப் செயலி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமானது. பயணர்களின் பாதுகாப்பு மற்றும் தனி உரிமை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் புதிய அப்டேட்களை அந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதேபோன்று தற்போது ஒரு அற்புதமான அப்டேட் வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறது.

இந்த புதிய அறிவிப்பின்படி பயனர்களின் செல்போன் எண்களை பாதுகாக்கும் பொருட்டு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது இதன் மூலம் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் தங்களது செல்போனிற்கு பதிலாக பெயரை பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. வாட்ஸ் ஆப் கணக்கு துவங்குவதற்கு மொபைல் எண் தேவைப்பட்டாலும் கணக்கு துவங்கிய பிறகு நமது எண்களை பிரைவசி அடிப்படையில் மறைத்து வைக்க இயலும்.

இதனை பயன்படுத்துவதற்கு செல்போன் எண்கள் தேவை இருக்காது என்றும் whatsapp கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களுக்கு என ஒரு யூசர் நேம் கிரியேட் செய்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயன்படுத்துவதைப் போல பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருக்கிறது. இந்த வசதி தற்போது பரிசோதனையில் இருக்கிறது. வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Next Post

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Mon Dec 4 , 2023
சென்னையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், அண்ணா […]

You May Like