fbpx

துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை… வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு…!

ஆந்திர கடலோர பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வின் காரணமாக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டு உள்ளது.

Baskar

Next Post

திருமணம் எப்போது ? … நடிகர் சிம்பு விளக்கம் ….  ஒரு வழியாக ரசிகர்களின் வாயை மூடினார் சிம்பு ….

Sun Sep 11 , 2022
சென்னையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புரமோஷன் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ள சிம்பு தனக்கு திருமணம் எப்போது ? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். கவுதம் வாசுதேவ்மேனன் உடன் இணைந்து  அவர் இயக்கும் ’’வெந்து தணிந்தது காடு’’ திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்பு . இப்படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. இன்னும் சில தினங்களே உள்ளதால் புமோஷன் குறித்த பணிகளில் பிசியாக இருக்கின்றார். இந்நிலையில் ரசிகர்கள் […]

You May Like