நாடு ஒருபுறம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று பல்வேறு விதங்களில் வளர்ந்து வருகிறது என்ற செய்தியை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், இன்னொரு புறம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று அனைத்து விதத்திலும், நாடு வளர்ந்து வந்தாலும், சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் இன்றளவும் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது சற்றே வேதனையாக இருக்கிறது.
அதாவது, தெலுங்கானா மாநிலம், பாக்தாத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தை கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே, அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அந்த கர்ப்பிணி பெண்ணை, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்துச் சென்ற விதம்தான் வேதனைக்குரியதாக இருக்கிறது.
அதாவது, அவர்கள் வசிக்கும் பகுதியில் சாலை வசதி இல்லாததால், அந்த பெண்ணை டோலி கட்டி, அதில் படுக்க வைத்து, அந்த பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே, மருத்துவமனை வசதி இல்லாததால், சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அந்த கர்ப்பிணி பெண்ணை, தோளில் சுமந்தபடி நடந்து சென்று, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மேலும், அந்த கர்பிணி பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அந்த கர்ப்பிணி பெண்ணை, தோளில் சுமந்து செல்லும் வீடியோ, இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது.
பின்னர் மருத்துவமனையில், அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சைக்காக அந்த பெண்ணை அவசர ஊர்தி மூலமாக பத்ராசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் தான், பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த பெண்ணை சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்ற மருத்துவமனைக்கு தோளிலேயே சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.