fbpx

ஒடிசா ரயில் விபத்து நடைபெற்ற பகுதியை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி….!

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாயினர். அந்த இடத்திற்கு நேரில் வந்த பிரதமர் நரேந்திர மோடி மீட்பு பணிகளை ஆய்வு செய்து இருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் இருந்து புவனேஸ்வரத்துக்கு விமானத்தின் மூலமாக வந்த பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்து இந்தியா விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் நேரடியாக பாலாசூரில் தொடர்வண்டி விபத்துக்கு உள்ளான பகுதிக்குச் சென்றார்.

அங்கு விபத்தில் சிக்கிய ரயில் பெட்டிகளையும், துரிதமாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளையும் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்திருக்கிறார்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினருடன் தீயணைப்பு வீரர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு விபத்து நடைபெற்ற பகுதிகளில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Next Post

கோரமண்டல் விரைவு ரயில் சென்ற லூப் லைன்..! அதனால்தான் விபத்தா?

Sat Jun 3 , 2023
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு நேர்ந்த கோர விபத்தில், 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நடந்த இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் இந்த நிகழ்வு குறித்து, 4 பேர் கொண்ட ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. வழக்கமாக ரயில்கள் பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் முதன்மையான பாதைகள் மெயின் லைன் என அழைக்கப்படுகிறது. அதே நேரம், அதிகப்படியான ரயில்களை […]

You May Like