fbpx

உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரண உதவி திட்டம்.. முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

உப்பளத் தொழிலாளர்களுகான நிவாரண திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்..

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட நெய்தல் உப்பு என்ற பெயரில் வெளிச்சந்தைக்கு உப்பு விற்பனை திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.. பின்னர் உப்பள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5000 நிவாரண உதவி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..

உப்பு உற்பத்தி இல்லாத வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் உப்பள தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் தவிப்பது வழக்கம்.. அவர்களது குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5000 நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.. அதன்படி 5 உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்..

Maha

Next Post

அக்.1 முதல் இந்த ஓய்வூதிய திட்டத்தில் இவர்களுக்கு அனுமதி இல்லை.. அரசு அறிவிப்பு..

Fri Aug 12 , 2022
அக்டோபர் 1, முதல் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர வருமான வரி செலுத்துவோருக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.. அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில், 2015ல் தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.. இந்த புதிய […]
முதலீடு

You May Like