fbpx

திரையுலகில் பரபரப்பு..!! ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த நடிகை சரண்யா..!! காவல்துறை வழக்குப்பதிவு..!!

ஆபாசமாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கும், அம்மா வேடத்திற்கும் பெயர் பெற்றவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது இவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் நிறுத்துவது தொடர்பாக பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த நடிகை சரண்யா, அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து ஆபாசமாகத் திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பக்கத்து வீட்டுப்பெண் ஸ்ரீதேவி, சிசிடிவி காட்சிகளை சமர்பித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் ஜோடியாக ‘நாயகன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா. அதன் பிறகு பல படங்களில் நடித்தவர், ’எம்டன் மகன்’, ‘விஐபி’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோவின் அம்மாவாக சிறப்பான நடிப்பைக் கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது இவரது கைவசம் ‘இடி முழக்கம்’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘பிரதர்’ உள்ளிட்டப் படங்கள் கைவசம் உள்ளது.

Read More : Gold Rate | வரலாறு காணாத உச்சம்..!! ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Chella

Next Post

அதிர்ச்சி..!! திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர்..!! என்ன காரணம்..? சோகத்தில் திமுகவினர்..!!

Mon Apr 1 , 2024
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் மும்முரமாக உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக சார்பில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தீவிர […]

You May Like