fbpx

ஷாக்!. மனைவி மீது ஜெயம் ரவி போலீசில் புகார்!. வீட்டை விட்டு வெளியேற்றியதாக குற்றச்சாட்டு!

 Jayam Ravi: தன்னை வீட்டிலிருந்து வெளியேற்றியதாக சென்னை அடையாறு காவல் நிலையத்தில் ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாக சினிமா விளம்பரங்களை மறைத்து பிரபலங்களின் விவாகரத்து பற்றிய விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவியின் பிரிவால் திரையுலகம் பரபரப்பாக இருந்தது, இப்போது கவனம் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி மீது திரும்பியுள்ளது. அந்தவகையில், நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

ஆனால், தனது அனுமதியின்றி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக மனைவி ஆர்த்தி குறிப்பிட்டிருந்தார். ஆரம்பத்தில், இருவரும் பரஸ்பரம் விவாதித்து இந்த முடிவை ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்று பலர் நம்பினர். ஆனால், இவர்களின் பிரிவுக்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரு காரணமாக இருக்கலாம் என வதந்திகள் பரவியது. இதனை ஜெயம் ரவி உறுதியாக மறுத்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை அடையாறு காவல் நிலையத்தில் ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆர்த்தி தன்னை தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளதாகவும், ஈசிஆர் சாலையில் உள்ள ஆர்த்தியின் வீட்டிலிருந்து தனது உடைமைகளை மீட்டெடுக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Readmore: நடிகர் ஜெயராமுக்கு என்ன ஆச்சு?. வைரலாகும் புகைப்படம்!. ரசிகர்கள் கவலை!

English Summary

Actor’s Police Complaint: “Wife Kicked Me Out!”

Kokila

Next Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி..!! இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

Wed Sep 25 , 2024
An announcement on the increase in the dearness allowance of central government employees is expected to be released today.

You May Like