Donald Trump: அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக எஃப்.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை, அவர் புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக ரகசியப் பிரிவினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த தாக்குதலை நடத்தியதாக, ரியான் வெஸ்லி ரூத் என்பவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு செய்தியை வெளியிட்டார், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன். என்னைச் சுற்றி துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது, ஆனால் இந்த சம்பவம் குறித்து வதந்திகள் பரவுவதற்கு முன்பு, நான் நலமாக இருக்கிறேன். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ” மேலும், “தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து என்னை யாரும் பின்வாங்கச் செய்ய முடியாது. நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்” என்று கூறியுள்ளார். கோல்ஃப் மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்குப் பிறகு டிரம்ப் தனது மார்-ஏ-லாகோ ரிசார்ட்டுக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கோரிய பெண்!. கணவன் குளிக்காததால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!