fbpx

Shocking | ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் திடீர் ராஜினாமா..!! என்ன காரணம்..? பெரும் பரபரப்பு..!!

தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு கேடர் 2011ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அனீஷ் சேகர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரை பொருத்தவரை ஏற்கனவே மதுரையில் ஆட்சியராக இருந்தவர். மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவர்.

அதேபோல பல்வேறு விதமான அதிரடி மற்றும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளையும் அவர் மதுரை ஆட்சியராக இருந்தபோது மேற்கொண்டுள்ளார். ஒரு துடிப்பான இளைஞராக பணியாற்றி வந்த அவர், தன்னுடைய சொந்த காரணத்திற்காக ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எல்காட் மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். தனக்கு தனிப்பட்ட காரணங்கள் சில இருப்பதாகவும், அந்த காரணத்தினால் ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பல மாவட்டங்களில் துணை ஆட்சியராகவும், மதுரை ஆட்சியராகவும், தமிழ்நாடு அரசின் பல துறைகளில் நிர்வாக ரீதியாகவும் பணியாற்றியுள்ள அனீஷ் சேகர், தனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : BJP | வாரணாசியில் பிரதமர் மோடி, காந்தி நகரில் அமித்ஷா போட்டி..? வெளியாகும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல்..!!

Chella

Next Post

Holiday | மார்ச் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! மாணவர்களுக்கும் லீவா..? ஆட்சியர் முக்கிய அறிவிப்பு..!!

Fri Mar 1 , 2024
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கோவில் திருவிழா திருத்தேர் உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக மார்ச் 14ஆம் தேதியன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு […]

You May Like