fbpx

அதிர்ச்சி சம்பவம் வீட்டில் பிணமாக கிடந்த காதல் ஜோடிகள்…..! காரணத்தைக் கேட்டு, அதிர்ந்த காவல்துறையினர்…..!

பொதுவாக காதல் என்று வந்து விட்டாலே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சகஜமான ஒன்றுதான். ஆனால், அந்த எதிர்ப்பையும் மீறி இளம் தலைமுறையினர் வாழ்ந்து காட்டுவது தான் அவர்களின் காதலின் உறுதியை பெற்றோர்களுக்கு பறைசாற்றும்.

ஆனால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து விட்டனரே என்ற காரணத்திற்காக, உயிரை மாய்த்துக் கொள்வது ஒருபோதும் உகந்த செயலாகாது. அப்படி ஒரு சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில், உயிருக்கு உயிராக காதலித்து வந்த, ஒரு இளம் காதல் ஜோடியின் காதலை, அவர்களுடைய பெற்றோர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். பொறுமையுடன் இருந்த காதல் ஜோடி ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து, தனியாக வாடகைக்கு குடியேறி இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

ஆனால், எதிர்பாராத விதமாக உள்புறமாக தாழிடப்பட்டிருந்த வீட்டிற்குள் காதல் ஜோடிகள் இருவரும், பிணமாக தூக்கில் தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சோம்நாத் மற்றும் சுஜாதா உள்ளிட்ட இருவரும் காதலிக்க தொடங்குவதற்கு முன்னர்,சோம்நாத், தானே மாவட்டம் கசரா தானாஜி நகர் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். அதே பகுதியில் வசித்த சுஜாதா என்ற இளம் பெண்ணுடன் சோம்நாத் பழகி வந்துள்ளார். அதன் பிறகு இவர்களுக்கு இடையிலான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் விவகாரம், இருவரின் வீட்டிற்கும் தெரியவந்த சமயத்தில், இருவர் வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

ஆனாலும் பெற்றோர்களின் எதிர்ப்பை பார்த்து தளர்ந்து போகாத காதல் ஜோடி, தன்னம்பிக்கையுடன் தனியே ஒரு வாடகை வீட்டை எடுத்து அதில் இருவரும் ஒன்றாக வசிக்கத் தொடங்கினர். எவ்வளவுதான் தன்னம்பிக்கையோடு இருந்தாலும் கூட, பெற்றோர்கள் தம்முடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லையே என்ற மன வருத்தத்தில் காதல் ஜோடிகள் இருவரும் உள்ளுக்குள் வருத்தப்பட்டு கொண்டு இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், வாடகை வீட்டின் உரிமையாளர் நேற்று சோம்நாத்தை சந்திப்பதற்காக வீட்டிற்கு வந்து, கதவை தட்டி இருக்கிறார்.ஆனால்,சோம்நாத் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. அதோடு, ஒருவித மயான அமைதி நிலவியது என்றும் சொல்லப்படுகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக இது பற்றி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உட்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்து, பார்த்த போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது காதல் ஜோடிகள் இருவரும், தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன காவல்துறையினரும், வீட்டின் உரிமையாளரும் ஒரு கணம் என்ன செய்வது என்று தெரியாமல், அப்படியே உறைந்து நின்று விட்டனர்.

அதன் பிறகு காவல்துறையினர், இருவரின் உடலையும் வைத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது பற்றி விசாரிக்க தொடங்கினர். அதோடு, அந்த வீட்டில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் சோதனையில் கடிதம் அல்லது வேறு ஏதாவது சமிக்கை உள்ளிட்ட எந்த விதமான ஆதாரமும் சிக்கவில்லை.

அதே நேரம், காவல்துறையினர் இருவரும் உண்மையிலேயே பெற்றோர்களின் எதிர்ப்பால், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு யாராவது இவர்கள் இருவரையும், கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டது போல ஜோடித்து வைத்திருக்கிறார்களா? என்று பல்வேறு விதமாக விசாரித்து வருகிறார்கள்.

.

Next Post

”உரிமைத்தொகை இன்னும் வரவில்லையா”..? ”இந்த தேதி வரை காத்திருங்கள்”..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Fri Sep 15 , 2023
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். ஆனால், நேற்றே பலருக்கு வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. அத்துடன் பலருக்கும் நீங்கள் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். மாதம் மாதம் உங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும் என்று எஸ்எஸ்எஸ் வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் 1.63 கோடி பேர். இவர்களில் தகுதியானவர் 1கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். தேர்வு […]

You May Like