fbpx

#கோயம்புத்தூர் :தகராறில் தந்தையே வெட்டி கொன்ற மகன்..! 

கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள கரப்பாடி என்ற நகரில் சிவலிங்கம் என்கிற கூலி தொழிலாளி தனது மனைவி சித்ராதேவி மற்றும் மகன் கார்த்திக்(24) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

மகன் வாகன ஓட்டுனராக இருக்கின்றார். சிவலிங்கம் மது குடிக்கும் பழக்கத்திற்கு மிகவும் அடிமையானவர் என்பதால் அடிக்கடி மனைவி சித்ராதேவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். 

இதனை கண்ட கார்த்திக் கோபமடைந்து தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மறைத்து வைத்திருந்த அரிவாளாலினை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளார். 

இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

#புதுச்சேரி :மது போதைக்கு அடிமையான தாய்.. சாக்கடையில் அழுகிய நிலையில் கண்டெடுத்த உடல்..! 

Tue Nov 29 , 2022
புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள பாகூர் கன்னியக்கோவிலில் சாராயக்கடை அருகே அழுகிய நிலையில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், கன்னியக்கோவில் இருக்கும் பச்சைவாழி அம்மன் கோவில் பகுதியில் இருளஞ்சந்தை புறாந்தொட்டியை சேர்ந்த ராணி 45 பெண் தனது 3 வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்த பெண் முழு நேரமும் மது போதையில் இருந்து வந்ததை தொடர்ந்து, மகன் உணவுக்காக […]

You May Like