fbpx

கிறிஸ்துமஸுக்கு வீட்டுலேயே சூப்பரான ‘ஒயின்’ இப்படி செஞ்சு குடிச்சி பாருங்க.! ரொம்ப சிம்பிள் ரெஸிபி.!

டிசம்பர் மாதம் தொடங்கி விட்டதால் இப்போதே கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகி வருகிறார்கள். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகளில் தயாரிக்கப்படும் பாரம்பரியமிக்க ஒயின் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இந்த ஹோம் மேட் ஒயின் தயாரிப்பதற்கு திராட்சை பழம், சீனி, திரித்த கோதுமை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் திராட்சை பழங்களை நன்றாக கழுவி அவற்றைக் கழுவிய நீர் முற்றிலுமாக வெளியேறுமாறு உலர வைத்த பின்னர் ஒரு மண் ஜாடியில் போட்டு இதனைத் தொடர்ந்து திராட்சை பழத்தின் மீது சீனி போட்டு அதன் மீது அடுத்த லேயர் ஆக திரித்த கோதுமை மற்றும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அந்த ஜாடியின் வாயை நன்றாக ஒரு காட்டன் துணியால் கட்டி மூடி வைக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஜாடியை திறந்து லேசாக கிளறி விட்ட பின் மூடி வைக்க வேண்டும். 21 நாட்கள் கழித்து ஜாடியிலிருந்து திராட்சை பழங்களை எடுத்து ஒரு காட்டன் துணி அல்லது சல்லடை பயன்படுத்தி நன்றாக பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இவ்வாறு எடுத்த சாறை மீண்டும் ஒரு காட்டன் துணியால் வடிகட்டி ஜாடியிலிட்டு முப்பது நாட்கள் காற்று மற்றும் சூரிய ஒளிப்படாமல் மூடி வைக்க வேண்டும். அடுத்த 30 நாட்கள் கழிந்தால் சுவையான திராட்சைப் பழ ஒயின் ரெடி.

Next Post

கண் திருஷ்டி, பொறாமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளால் கஷ்டப்படுகிறீர்களா.? நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!

Mon Dec 4 , 2023
மனிதர்களாகிய அனைவரும் வாழ்வில் நேர்மறையான சிந்தனையுடன் அமைதியான சூழ்நிலையில் நல்ல செல்வ வளத்தோடு வாழ்வதையே விரும்புவோம். எனினும் நம்மை சுற்றி இருக்கின்ற மக்களின் பொறாமை எண்ணங்கள் அவர்களது கண் திருஷ்டி வழியாக வெளிப்பட்டு நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தும். இவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பரிகாரம் ஒன்றை இந்த பதிவில் பார்ப்போம். நம் வீட்டை சூழ்ந்திருக்கும் எதிர் வினைகள் கண் திருஷ்டி […]

You May Like