வள்ளலார் நினைவு தினமான வரும் 11-ம் தேதி அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பில்; வள்ளலார் நினைவு தினமான வரும் 11ம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல்1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல்3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3(ஏ), எப்எல்3(ஏஏ) மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படும். 11ம் தேதி (செவ்வாய் கிழமை) அன்று வள்ளலார் நினைவு தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே போல தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் எதிர்வரும் 11.02.2025 வள்ளலார் நினைவு தினம் அன்று தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL-3, FL-3A / FL-4A உரிமம் பெற்ற தனியார் ஓட்டல்களின் மதுக்கூடங்கள்/முன்னாள் படை வீரர் மதுவிற்பனைக் கூடம் அனைத்தும் 10.02.2025 10.00 மணி முதல் 12.02.2025 காலை 12.00 மணி வரை மதுபானங்கள் விற்பனை இன்றி மூடி வைக்க உத்தரவிடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.