நாள்தோறும் நாம் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி பல்வேறு செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த விதத்தில், இன்று தனியார் நிறுவனமான TCS நிறுவனத்தில், காலியாக இருக்கின்ற வேலை வாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை தெரிந்து கொள்ளலாம்.
இந்த தனியார் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில், floor planner பணிக்கு காலியாக உள்ள பல்வேறு காலி பணியிடங்களை நிரப்ப இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த பணி தொடர்பான முழுமையான விவரங்களை பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
Floor planner பணிக்கு காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், இந்த பணியில் சேர்வதற்கு, அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் இளம் கணிதவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த பணியில் சேர வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 12 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்த நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் written test/online test,interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பனியமறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆர்வமான மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், சென்று விண்ணப்ப படிவத்தை பதிவு செய்து பின்னர் பூர்த்தி செய்து இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வரும் நவம்பர் மாதம் 3ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிறுவனத்தால், ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறப்பட்டுள்ளது.