fbpx

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட மாணவி….! அரசு பள்ளி ஆசிரியர் அதிரடி கைது….!

மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கிணற்றில் வீசி கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பவுலி என்ற பகுதியில், இருக்கின்ற அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ராம் ரத்தன் மீனா(37) என்ற நபருடன், சென்ற செவ்வாய்க்கிழமை ஒரு 16 வயது மாணவி உரையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவர் திடீரென்று காணாமல் போனார்.

ஆகவே அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தந்தை, கடந்த புதன்கிழமை, இது குறித்து, காவல்துறையில் புகார் வழங்கினார். அந்த சிறுமியின் பெற்றோர் ஆலயத்திற்கு சென்று இருந்த போது, கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதாக காவல்துறை தரப்பின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான், அந்த கிராமத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில், இருக்கின்ற கிணறு ஒன்றில் அந்த சிறுமியின் உடல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், அரசு பள்ளி ஆசிரியர் மீனா தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கிறார் என்று சிறுமியின் தந்தை குற்றம் சுமத்தி இருக்கிறார். ஆகவே, இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், போக்சோ சட்டத்தின் கீழ் அரசு பள்ளி ஆசிரியர் மீனா கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அத்துடன், பிரேத பரிசோதனை அறிக்கைகள் கிடைத்தால் தான், இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், சுமார் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, அரசு வேலை, அந்த பள்ளியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை மற்றும் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்து, சென்ற வியாழக்கிழமை இரவு வரையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு உங்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை தொடர்ந்து, மாணவியின் உடலுக்கு கடந்த பத்தாம் தேதி இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளது.

Next Post

திருவாரூர் அருகே இளம்பெண் தற்கொலை, வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா…..? காவல்துறையினர் அதிரடி விசாரணை…..!

Sat Aug 12 , 2023
28 வயதான இளம் பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே, இருக்கின்ற அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் (37) இவருடைய மனைவி வினோதா (28) என்ற தம்பதிகளுக்கு ஸ்ரீகாந்த்(5), யாஷிகா(3) என்ற இரு குழந்தைகள் இருக்கின்றன. துளசிராமன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான், கடந்த ஒன்பதாம் தேதி […]

You May Like